Tuesday, August 23, 2011

Last Diwali and my treasure trove!

Last Diwali, I hit upon a treasure trove of a sort! I was proudly reminiscing my childhood Diwalis to Arav. Where is Sholinghur, shot back my son! Is it in US (his favorite uncle lives there)? And that's when I thought it is time that I'd taken him to Sholinghur, which is approximately hundred and twenty kilometers from Chennai.

While Arav enjoyed the company of his uncle and nephews, I was busy rummaging through the old boxes stashed away in the attic, yearning for anything that would remind me of my childhood days at Sholinghur. Thanks to my brother, I spotted three of my diaries from 1988-90.

Here is a page from those diaries...!

-----------------------

நண்பனின் சடங்கிற்காக போகும் அவசரத்திலும்
கூட்டுறவின் (பண்டக சாலை) விலைபட்டியலை 
நின்று நிதானத்துடன் பார்க்கும் 
நடுத்தர வர்க்கங்கள்!

தான் வேலை செய்வதற்காக கிடைத்த 
புதுக் கூடைக்காய் 
சந்தோஷப்பட்டு போகும் 
தெருபெருக்கும்
நகராட்சி ஊழியன்!

அழுது பின்னால் வரும் 
பிள்ளைக்கும் செவிகொடாது
2:30 சினிமா காட்சிக்காய்
பறக்கும் பவுடர் பூசிய அம்மா!

நகரத்திற்கு புதிதாய் வந்த
வேர்க்கும் வெயிலிலும்
மப்லரும் வானவில் 
கண்ணாடியும் அணிந்த 
கிராமத்து இளவட்டங்கள்!

இவர்களை 
ஏளனமாய் பார்த்து
சிரித்து போகும்
கல்லுரி இளைஞ்சிகள்!

மாடியில்
விசிறிக்கடியில் ஷெல்லி 
படிக்கும் தனக்காய் 
சந்தோஷப்படும் இளைஞன்!  

பொய்யான கோபத்துடன் 
இவைகளை வழக்கமாய் பார்த்துப்போகும் நானும்! 
இவைகளில் யார் அல்லது எது மாறும்!

குறிப்பு: எழுதியபோது வயது 16
-------------------------------------------------------

3 comments:

RK said...

சிறப்பு நண்பரே, உமது கவிதையும், கதையும் மிகச்சிறப்பு. நீர் குறிப்பிட்ட வயதில் நானும் கவிதைகள் எழுதியதை நினைவுபடுத்திவிட்டீர்!

Sundar said...

திரு ஆர். கே., கூகிள் டிரான்ச்ளிடேரஷன் சேவைக்கு நன்றி, உங்களுடைய கருத்தை தமிழில் படித்ததில் மட்டட்ற மகிழ்ச்சி!

Prabahar K said...

Super Sundar! Post some more!